ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்
ADDED :2499 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வைத்தியநாதசுவாமி, பிரியாவிடை அம்பாள் ஒரு தேரிலும், சிவகாமி அம்பாள் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். ரகு பட்டர் சிறப்பு பூஜைகள் செய்ய திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 8:15 மணிக்கு திருத்தேரினை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் ஜவகர் முன்னிலையில் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேளதாளங்கள், முழங்க, சங்கொலி ஒலிக்க, பக்தர்களின் சிவாய நமஹ கோஷத்துடன் தேரானது கோயில் ரதவீதிகளில் வலம் வந்தது. ஒரு மணிநேரத்தில் ரதவீதகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது.