உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி பச்சமலை முருகன் கோவிலில் 1 டன் வில்வ இலை கொண்டு லட்சார்ச்சனை

கோபி பச்சமலை முருகன் கோவிலில் 1 டன் வில்வ இலை கொண்டு லட்சார்ச்சனை

கோபி: பச்சமலை முருகன் கோவிலில், ஒரு டன் வில்வ இலை கொண்டு, லட்சார்ச்சனை விழா கோலாகலமாக நடந்தது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பச்சமலையில், வைகாசி விசாக திருவிழா மற்றும் லட்சார்ச்சனை, சத்ரு சம்ஹார ஹோமம் விழா, கடந்த, 15ல் தொடங்கியது. இரு நாட்களாக,
தினமும், காலை, 9:00 மணி முதல், மதியம் 12:00 மணி, மாலை, 4:30 மணி முதல், இரவு, 6:30 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது.

மூன்றாவது நாளாக நேற்றும் (மே., 17ல்) தொடர்ந்த நிகழ்வில், தலா, 40 கிலோ எடை கொண்ட, 25 மூட்டைகளில், ஒரு டன் அளவுக்கு வில்வ இலை கொண்டு வரப்பட்டது. முருகனின், 1,008 நாமாவழியில், அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள், லட்சார்ச்சனையில் ஈடுபட்டனர்.
நிறைவடைந்த பின், இரண்டு கால அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !