உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டையில் மழை வேண்டி ஏகாதச ருத்ர ஜபம்

ஊத்துக்கோட்டையில் மழை வேண்டி ஏகாதச ருத்ர ஜபம்

ஊத்துக்கோட்டை: பருவ மழை பொய்த்துப் போனதால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், மழை வேண்டி ராமலிங்க ஈஸ்வரர் சுவாமிக்கு, 1,008 குடம் தண்ணீர் அபிஷேகம் நடந்தது.எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி ஊராட்சியில் உள்ளது ராமலிங்க ஈஸ்வரர் சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில். சமீப காலமாக பருவ மழை பொய்த்துப் போனதால், மழை வேண்டி, இக்கோவிலில், ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் சகஸ்ர கடாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் (மே., 18ல்)மாலை, மூலவர் ராமலிங்க ஈஸ்வர சன்னதிக்கு செல்லும் வழியை, களிமண்ணால் பாதி அடைத்த நிலையில், 1,008 குட
தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது, குப்புசாமி சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் 11 முறை, ஏகாதச ருத்ர ஜபம் செய்தனர். சகஸ்ர கடாபிஷேகம் மற்றும் ருத்ர ஜபத்தை காண திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 1,008 குட தண்ணீர் அபிஷேகம் முடிந்த நிலையில், சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.பின், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். 15 ஆண்டு களுக்கு முன், இதேபோல், சகஸ்ர கடாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !