உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டரை எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை

பட்டரை எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை

பட்டரை:பட்டரை எல்லையம்மன் கோவிலில், ஜாத்திரை நடந்தது.மணவாள நகர் அடுத்த, பட்டரை கிராமத்தில், அதிகத்தூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ளது

எல்லையம்மன் கோவில். இங்கு, 29ம் ஆண்டு, ஜாத்திரை, 12ம் தேதி துவங்கி, நேற்று 19ல் வரை நடந்தது.முன்னதாக, 7ம் தேதி கங்கையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் கூழ் வார்த்தலுடன்
ஜாத்திரை துவங்கியது. பின், 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, பால்குடம் எடுத்தலும், பின், அம்மனுக்கு பொங்கல் வைத்து, காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து, 13
முதல், 18ம் தேதி வரை, எல்லையம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.

பின், நேற்று மே 19ல்.,  காலை, 7:00 மணிக்கு எல்லையம்மனுக்கு அடிதண்டம் போடுதல்
நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மன் குடத்துடன் மஞ்சள் நீராடுதலும் நடைபெறும்.பின், அம்மனுக்கு பக்தர்கள் அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு,
எல்லையம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.வரும், 27ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு, எல்லையம்மனுக்கு விடையாற்றி ஊர்வலம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !