தலைவாசலில் தமிழகத்தின் பெரிய புத்தருக்கு பூஜை
ADDED :2332 days ago
தலைவாசல்: புத்த பூர்ணிமாவையொட்டி, தமிழகத்திலேயே பெரிய புத்தர் சிலைக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, தியாகனூரில், பழமையான,
புத்தர் சிலை உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, 8 அடி உயரம், 4.5 அடி அகலமுடைய இச்சிலை, தமிழகத்திலேயே மிகப்பெரியது. புத்த பூர்ணிமாவையொட்டி, அந்த புத்தர்
சிலைக்கு, நேற்று 19ல், சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், தியாகனூர் மணிமண்டபத்திலுள்ள, ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு புத்தர் சிலைக்கும், பூஜை நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மேலும், புத்த பிக்கு தம்மசீல், புத்தரின் பிறப்பு, வாழ்க்கை வரலாறு, அவர் ஞானம் பெற்றது உள்ளிட்ட தகவல்களை, பக்தர்களிடையே பகிர்ந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை, புத்த பூர்ணிமா விழாக்குழு, மக்கள் செய்திருந்தனர்.