விழுப்புரம் சங்கரமடத்தில் மகா பெரியவர் ஜெயந்தி விழா
ADDED :2332 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் மகா பெரியவர் ஜெயந்தி விழா நேற்று (மே., 19ல்) நடந்தது.காஞ்சி மாமுனிவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்ததை கொண்டாடும் வகையில், நேற்று (மே., 19ல்) காலை முதல் ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது.மதியம் அவரது பிறந்த இடத்தில்,
பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதுகை மற்றும் விக்ரஹத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
பின், மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில் மகா பெரியவரின் விக்ரஹம் மற்றும் திருவுருப்படம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.