செஞ்சி சிங்கவரம் கோவிலில் கருடசேவை உற்சவம்
ADDED :2332 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கம் சார்பில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கவரம் ரங்கநாதருக்கு 44வது ஆண்டு கருட சேவை உற்சவம் நடந்தது.
இதை முன்னிட்டு தாயாரம்மாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். மாலை 6 மணிக்கு ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். சிங்கவரம் கிராமம் மற்றும் செஞ்சி காந்தி பஜாரில் சுவாமி வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செஞ்சி தாலுகா வாணியர் வைசியர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.