உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

கோவை மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

கோவை:சுந்தராபுரம், ஆர்.என்.டி., காலனியில் உள்ள, திருமூர்த்தி மற்றும் திங்களூர் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று (மே., 20ல்)காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இன்றிரவு, 7:00 மணிக்கு, பூச்சாட்டு நடக்கிறது. நாளை 22 முதல் வரும், 27 வரை, தினமும் இரவு, 7:00 மணிக்கு, பூவோடு எடுத்தல், அம்மன் அழைத்தல் நடக்கிறது. 28ல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

வரும், 29ம் தேதி காலை, 8:30 மணிக்கு, குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோவிலில் இருந்து, அம்மன் ஊர்வலம், மதியம், அன்னதானம், மாலை, மாவிளக்கு பூஜை நடக்கின்றன. 30ம் தேதி காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மாலை, 5:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 31ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !