உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் கூத்தாண்டவர் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

புதுச்சத்திரம் கூத்தாண்டவர் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

புதுச்சத்திரம்: கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.புதுச்சத்திரம் அடுத்த கொத்தட்டை கூத்தாண்டர் கோவிலில், ஆண்டுதோறும் அரவாண் களபலி திருவிழா நடப்பது வழக்கம்.

இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பர். இந்தாண்டு விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. திருநங்கைகளுக்கு தாலி கட்டும் விழா, அரவாண் களபலி விழா வரும் 21, 22 ம் தேதிகளில் நடக்கிறது.திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதையொட்டி
விழாக்குழுவினர் சார்பில், கோவில் வளாகத்தைச் சுற்றி 13 கேமராக்கள், சாலை முகப்புகளில் 3 கேமராக்கள் என, மொத்தம் 16 சி.சி.டிவி., கேமராக்கள் அமைக்கும் பணி நேற்று (மே., 20ல்) நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !