உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி ஸ்ரீவானத்தூரம்மன் கோவிலில், 108 பால்குட ஊர்வலம்

பண்ருட்டி ஸ்ரீவானத்தூரம்மன் கோவிலில், 108 பால்குட ஊர்வலம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவானத்தூரம்மன் கோவிலில், 108 பால்குட ஊர்வலம் நேற்று முன்தினம் (மே., 19ல்) நடந்தது.பண்ருட்டி அடுத்த
கோட்லாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவானத்தூரம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா 18ம் தேதி காலை 6:00 மணிக்கு பந்தல்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மே., 19ல்) காலை 7:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலத்தில் பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு வசந்த படையல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !