பள்ளிப்பட்டு கங்கையம்மன் ஜாத்திரை உற்சவம்
ADDED :2332 days ago
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ளது கங்கையம்மன் கோவில். ஞாயிற்றுக் கிழமை முதல், கங்கையம்மன் ஜாத்திரை உற்சவம் நடந்து வந்தது.முதல் நாளில், அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில், திரளான பெண்கள் பங்கேற்று, பொங்கல் படையல் வைத்தனர். நேற்று முன்தினம் (மே., 21ல்), கோவில் வளாகத்தில் உற்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் (மே., 21ல்) இரவு துவங்கி, நேற்று (மே., 22ல்) காலை வரை, பள்ளிப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் உற்சவர் அம்மன் உலா எழுந்தருளினார்.நேற்று (மே., 22ல்), காலை, 8:00 மணிக்கு, கங்கையம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொற்றலை ஆற்றங்கரையில் உள்ள ஊருணியில் கரைக்கப்பட்டார். இதில், திரளான பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.