உடுமலை பெரியகாளியம்மன் பூச்சாட்டு திருவிழா
ADDED :2334 days ago
உடுமலை : உடுமலை, கொடிங்கியம் பெரியகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவை யொட்டி, நேற்று (மே., 22ல்)திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கொடிங்கியம் ஊராட்சியில்
பழமையான பெரியகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், பூச்சாட்டு திருவிழாவையொட்டி, கடந்த 14ம்தேதி நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
நடந்தது. நேற்றுமுன்தினம் (மே., 21ல்) இரவு சக்தி கும்பம் அழைத்தல், நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று (மே., 22ல்) காலை பெரியகாளியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள், பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்தும், முளைப்பாரி வைத்தும் வேண்டுதல்களை
நிறைவேற்றினர். சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.