உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெட்டப்பாக்கம் : மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.

மடுகரை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் அர்ஜூணன் திரவுபதி
திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி மாலை திரவுபதி-அர்ஜூணன் மணக்கோலத்தில் சன்னதி புறப்பாடும், பின் அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவையும், மாலை 6:00
மணிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பழவகை தட்டுகள் சீர்வரிசை வழங்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி
வீதியுலா நடந்தது. இன்று (மே., 23ல்) காலை 6.30 மணிக்கு கூத்தாண்டவர் ரத உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !