உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் நீதிபதி சுவாமி தரிசனம்

காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் நீதிபதி சுவாமி தரிசனம்

காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தனதுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தனது குடும்பத்துடன் நேற்று (மே., 22ல்) திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்தராஜா சால்வை அணிவித்து வரவேற்றார். பின் நீதிபதி சுரேஷ்குமார் தனது குடும்பத்துடன் தர்பாரண்யேஸ்வரர், முருகர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசித்தார்.

பின்னர், சனீஸ்வரபகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். முன்னதாக எள்தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார். உடன் சீனியர் எஸ்.பி.,ராகுல்அல்வால், கோவில்
நிர்வாக அதிகாரி சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !