உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரங்கிப்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை:கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் நடந்த அரவாண் களப்பலி நிகழ்ச்சியில், ஏராளமானவர்கள் பங்கேற்று நேர்த்தி் கடனை செலுத்தினர்.

பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடந்த திருநங்கை திருவிழாவை தொடர்ந்து அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. தேரில்,
அரவாண் சுவாமி ஊர்வலம் நடந்தது.அங்கு, திருமணமாகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மற்றும் பொதுமக்கள், குறைகளை நிறைவேற்றித்தர கோரிக்கை
வைக்கின்றனர். கோரிக்கை நிறைவேறியவர்கள் அரவாணுக்கு, வடை மாலை, பூ மாலை, எலுமிச்சை பழம் மாலை செலுத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.அரவாண் சுவாமி, ஊரின் மத்திய இடத்திற்கு சென்றதும், அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள், அரவாணிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !