உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்

சப்த கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் : மதுரை காஞ்சரம்பேட்டை அருகே சின்னப்பட்டியில் சப்த கன்னிமார், ஆண்டிச்சாமி, கருப்பணசாமி, நாகர், நந்திபகவான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களின் நீர் ஊற்றப்பட்டது. பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை சின்னப்பட்டி, குறவன்குளம், முடுவார்பட்டி, நரியூத்து, மாவூத்தன்பட்டி, வாவிடைமருதூர் கன்னிமார் கோயில் பங்காளிகள் மற்றும் நிர்வாககுழு, செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !