புதுச்சேரி பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்
ADDED :2620 days ago
புதுச்சேரி:புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று (மே., 23ல்) நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் 33ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று (மே., 23ல்) திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
இதையொட்டி, காலை 10.30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 5.00 மணிக்கு வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.