உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொல்லாப்பிள்ளையார் கோயிலில் பிரமோற்சவ விழா

பொல்லாப்பிள்ளையார் கோயிலில் பிரமோற்சவ விழா

கடலூர் : காட்டுமன்னார்கோயில் வட்டம், திருநாரையூர் கிராமத்தில், பொல்லாப் பிள்ளையார் மற்றும் திரிபுரசுந்தரி அம்மை உடனாகிய சவுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவ சிறப்பாக நடைபெற இருக்கிறது. தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துகுமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் திருமுன்னிலையில் வைகாசி விசாக பிரமோற்சவம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்

5.6.2019 அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ஆச்சார்ய ராக்ஷ்பந்தனம்.

6.6.2019  அருள்மிகு நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை ,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி ரிஷபத் துவஜாரோஹணம்

7, 8, 9 .6.2019 காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் ஹோமம், பஞ்சமூர்த்திகள் திருவீதிவுலா

10.6.2019 ஸ்தல ஐதீகத் திருநாள், நாரை பூசித்த காட்சி ரிஷப வாகனம் இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிவுலா

11.6.2019  மாலை மணி 7.00க்கு மேல் திரிபுரசுந்தரி அம்பிகா சமேத சவுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம், பஞ்சமூர்ததிகள் திருவீதிவுலா

12, 13 .6.2019  காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் ஹோமம், பஞ்சமூர்த்திகள் திருவீதிவுலா

14.6.2019 காலை மணி 9.00 மேல் 10.00 க்குள் திருத்தேர் வடம் பிடித்தல். இரவு நடராஜமூர்த்தி யாகம்.   தேர்க்கால் காட்சி கொடுத்தருளல்

15.6.2019 காலை நடராஜர் புறப்பாடு தீர்த்தவாரி, பகல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு தீர்த்தவாரி,  இரவு     அவரோஹணம், யாகசாலை நிறைவு கடம்புறப்பாடு அபிஷேகம்

16.6.2019  விடையாற்றி உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் பிராயச்சித்தாபிஷேகம்
யாகசாலை பூஜை காலங்களில் வேதபாராயணமும், மதுரை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மூலம், தேவார திருமுறை பாராயணமும், நாட்டிய நாதஸ்வர இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறும்.

என்றும் இறைபணியில்

ஆர். முத்துக்குமாராசாமி சிவாச்சாரியார்
உ. வெங்கடேச தீக்ஷிதர். எம்.ஏ. சிதம்பரம்.
மொபைல்: 9894406321


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !