கமுதி அருகே பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2336 days ago
கமுதி : கமுதி அருகே வலையபூக்குளம் பெரியமுத்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.கமுதி அருகே வலையபூக்குளம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியபட்ட ஸ்ரீபெரியமுத்தம்மன், ஸ்ரீசந்தனமாரியம்மன், ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீபெரியாண்டவர் திருக்கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், மிருத்சங்கிரகண பூஜைகள் செய்யபட்டுகொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யபட்டு, கொடியேற்றம் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் வைகாசி பொங்கல் விழா மே 10 ல், துவங்கியது.