பண்ருட்டி அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்தாலம்மன், ஜெகன்நாதீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று 23ம் தேதிநடந்தது.
விழா, கடந்த 21ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் 22ம் தேதி 2ம் கால பூஜையும், மாலை 3ம் கால பூஜையும், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று 23ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் 4ம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடந்தது.காலை 9:45 மணியளவில் செல்வ விநாயகர் கோவிலுக்கும், ஜெகன்நாதீஸ்வரர் கோவிலுக்கு 10:00 மணிக்கும், முத்தாலம்மன் கோவிலுக்கு 10:30 மணிக்கும் மகாகும்பாபிஷேகம்நடந்தது.