காரியாபட்டி ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2335 days ago
காரியாபட்டி: கல்குறிச்சி ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்கை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், பூர்ணாகுதி, தீபாரதனை, யாகசால பூஜை, கோ பூஜையுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.