உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி, வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி, வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி: கே.செவல்பட்டி  ஸ்ரீ வைத்தீஸ்வரன், தையல்நாயகி கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல்கால பூஜையில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,  நவசக்தி ஹோமம், நவக்கிரக ஹோமம்,  கோ பூஜைகள் நடந்தன.   நான்காம் கால யாக பூஜை செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. புனித நீரை  சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து  சென்று கோபுர கலசங்களுக்கு  அபிஷேகம் செய்தனர்.  

மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபராதனைகள் நடந்தன.  அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !