உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தநாயக்கன்பாளையம், மழை பெய்ய வேண்டி பொங்கல் படையல்

பெத்தநாயக்கன்பாளையம், மழை பெய்ய வேண்டி பொங்கல் படையல்

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் தர்மராஜர், திரவுபதியம்மன் கோவிலுக்கு, நேற்று (மே., 24ல்), 108 பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு வந்தனர். பின், மழை பெய்ய, ஊர்மக்கள் சுபிட்சம் பெற வேண்டி, கோவில் வளாகத்தில், ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, திரவுபதியம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், குந்தி உள்ளிட்டோரை அலங்காரப்படுத்தி, முக்கிய வீதிகள் வழியாக, திரளான பக்தர்கள் ஊர்வலமாக கொண்டுவந்தனர். அப்போது, மக்கள் பூஜை பொருட்களை கொடுத்து, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !