திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் வீதியுலா
ADDED :2333 days ago
திண்டிவனம் : திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் 6வது நாள் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி வீதியுலா நடந்தது.
அதனையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் செயலர் ரங்கமன்னார், இயக்குனர் சீனிவாசன், வாசவி கிளப் ஆளுநர் சிவக்குமார், பொருளாளர் நாகராஜன், முன்னாள் தலைவர்கள் நடராஜன் சீனுவாசன், பிரபாகரன், ஸ்ரீஹரன், சங்கர், சேகர், மணிகண்டன், நாகராஜகுப்தா உட்படபலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் செய்திருந்தது.