உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

விக்கிரவாண்டி அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி திரவுபதியம்மன் கோவிலில் தேர்திருவிழா மற்றும் தீ மிதி திருவிழா நடந்தது.

கோவிலில், கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 21ம் தேதி அர்ச்சுனன் தபசு நடந்தது. நேற்று முன்தினம் (மே., 23ல்) இரவு 7ம் நாள் அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.8ம் நாள் தேர் திருவிழாவையொட்டி நேற்று (மே., 25ல்), அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச் செய்து, வீதியுலா நடந்தது. மாலை 5:00 மணிக்கு மேல் அக்னி குண்டம் மூட்டப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சக்தி கரகம் அக்னி குண்டத்தில் இறங்க தொடர்ந்து பக்தர்கள் அக்னி குண்டத்தில்
இறங்கி, தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று (மே., 25ல்)அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாநடக்கிறது.விழா ஏற்பாடுகளை தொரவி சமூக ஆர்வலர் சுப்ரமணி தலைமையில்
தீ மிதி விழா உபயதாரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !