உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்வர பார்வதி சிறப்பு ஹோமம்

சுயம்வர பார்வதி சிறப்பு ஹோமம்

ஊட்டி :ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்­தபுரம் பகுதியில் உள்ள கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 18ம் தேதி சுயம்வர பார்வதி சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்த­புரம் பகுதியில் அமைந்துள்ள கேம்ப் முத்து­மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இங்கு திருமண தடை நீக்கி நல்ல இல்வாழ்க்கை தரும் சுயம்வர பார்வதி சிறப்பு ஹோமம் வரும் 18ம் தேதி காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் பக்த ஜன சமிதியினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !