உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது.பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் தீ மிதி
திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. 9ம் தேதி திரவுபதியம்மன் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா நடந்தது.

கடந்த 24ம் தேதி மாலை தீமிதி திருவிழா நடந்தது. உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் (மே., 25ல்) மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !