உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் பைரவருக்கு சிறப்பு பூஜை

விருத்தாசலம் பைரவருக்கு சிறப்பு பூஜை

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.தேய்பிறை அஷ்டமியையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று
(மே., 26 ல்)காலை, ஆழத்து விநாயகர், அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

மாலை 4:00 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அரளி மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !