மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2321 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2321 days ago
செல்வவளம் மிக்க தண்டகம் என்னும் நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்தார். ஒருமுறை முனிவர் ஒருவரின் கழுத்தில், இறந்த பாம்பை மாலையாக அணிவித்ததால், நரகம் செல்ல நேர்ந்தது. தண்டனைக்காலம் முடிந்த பின் பூமியில் பிறப்பெடுத்தார். ஒருமுறை காட்டில் பருந்தாக பிறந்தார்.
இந்நிலையில் அங்கு வாழ்ந்த ’சுகுப்தி’ என்னும் முனிவரைக் காண்பதற்காக ராமனும், சீதையும் வந்தனர். அப்போது அந்த பருந்தும் அங்கிருந்தது. முனிவருக்கு ராமர் பாதபூஜை செய்தார். அதைக் கண்ட பருந்துக்கு முற்பிறவி ஞாபகம் எழுந்தது. முன்வினை பாவத்தால் தானே, இப்படி இழிநிலை ஏற்பட்டது என வருந்தியது. பாவம் தீர முனிவர் மீது பட்ட தீர்த்தத்தில் உருண்டு எழுந்து உடலை நனைத்தது. அதன் பலனாக பொன்னிறமான இறக்கை முளைத்தது. அதைக் கண்டு வியந்த சீதை ’ஜடாயு’ என அப்பருந்துக்கு பெயரிட்டாள். ’ஜடாயு’ என்பதற்கு ’பொன்னிற இறகு கொண்ட பறவை’ என்பது பொருள். பின்னாளில் சீதையைக் கடத்திய ராவணனுடன் போராடியது இந்த ஜடாயு தான். ராவணன் அதன் இறக்கைகளை வாளால் வெட்டிச் சாய்த்தான். அந்த வழியே வந்த ராமர், ஜடாயுவின் காதில் மந்திரம் ஜபித்து அதற்கு நற்கதியை வழங்கினார்.
2321 days ago
2321 days ago