சூலூர் ஆதி விநாயகருக்கு கும்பாபிஷேகம்
ADDED :2327 days ago
சூலூர்: சூலூரை அடுத்த சின்னமோப்பிரிபாளையம் கிராமத்தில் உள்ள ஆதி விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, கடந்த சில மாதங்களாக, கருவறை, முன்கோபுரம், மகாமண்டபம் புனரமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன. வரும், ஜூன் 12ம்தேதி அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. நான்கு கால பூஜைகளை தொடர்ந்து ஹோ மங்கள், 64 விநாயகர் மூலமந்திர ஹோமம், சதுர் வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. 14ம் தேதி காலை, 6:30 முதல், 7:30 மணிக்குள் ஆதி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.ஸ்ரீ ஹரி பஜனை குழுவை சேர்ந்த, கோபியர்களின் கோலாட்டம், சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், கிராமிய தெம்மாங்கு இசை நிகழ்ச்சிநடக்கின்றன.