அத்தனூர் அம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி யாகம்
ADDED :2327 days ago
சூலூர்: அத்தனூர் அம்மன் கோவிலில், உலக நலன் வேண்டி, ஹோமம் நடந்தது. சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் பழமையானது. இங்கு, 26ம் ஆண்டு விழா, கடந்த, 14ம் தேதி கோவில் சாட்டுதலுடன் துவங்கியது. அன்றாடம் பக்தர்கள் அக்னி கம்பம் சுற்றி நடனமாடினர்.நேற்று முன்தினம் (மே., 26ல்) உலக நலன் வேண்டி, துர்க்கா சூக்த ஹோ மமும், சுமங்கலி பூஜையும் நடந்தன.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று (மே., 27ல்) பண்டார வேஷம் மற்றும் அம்மை அழைத்தல் நடந்தது. நாளை (மே., 29ல்) காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அழைக்கப்பட்டு, திருவீதி உலா நடக்கிறது. இரவு வள்ளி கும்மி நடக்கிறது.