உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வரதர் வைபவம்: தனி கவுன்டர் கோரிக்கை

அத்தி வரதர் வைபவம்: தனி கவுன்டர் கோரிக்கை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திகிரி வரதரை, உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக, தனி கவுன்டர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அனந்தசரஸ் புஷ்கரணி தெப்பக்குளத்தில் இருந்து, அத்திகிரி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம், ஜூலை, 1ல் துவங்குகிறது.தொடர்ச்சியாக, 48 நாட்களுக்கு இந்த வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தை உள்ளூர், வெளியூர், வெளிநாடு என, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காண உள்ளனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி., தரிசனம் என, பல தரிசனத்திற்கு கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு என, தனி கவுன்டர் அமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !