மாரியம்மன் திருவிழாவில் அக்னிச் சட்டி ஊர்வலம்
ADDED :2329 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களின் அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சரங்குத்துதல் நடந்தது. நேற்று காலை, பிச்சம்பட்டி, வளையார்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அக்னிச் சட்டி எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.