உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரி: அக்னி நட்சத்திர பூர்த்தியையொட்டி, புதுச்சேரி அங்காளம்மன் கோவிலில் இன்று (29ம் தேதி) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது.

புதுச்சேரி சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் அங்காளம்மன் கோவிலில், அக்னி நட்சத்திர பூர்த்தியை யொட்டி, இன்று (29ம் தேதி) காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு, இளநீர், பால், பன்னீர் உள்பட மங்கள திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மூலிகை தைலத்தை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, அம்மனுக்கு வெண்ணெய் சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார்,தனி அதிகாரி ஜனார்த்தனன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !