ஓம்காளியம்மன் கோவிலில் வரும் 31ல் திருவிழா
ADDED :2329 days ago
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரத்தில் உள்ள மாரியம்மன், ஓம் காளியம்மன் கோவிலில் கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று இரவு, 10:00 மணிக்கு அம்மை அழைக்கப்படும். நாளை மாலை, 5:00 மணியளவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்தல், வாண வேடிக்கை உள்ளிட்டவை நடக்கின்றன. வரும், 31 அதிகாலை, 4:00 மணிக்கு ஓம் காளியம்மனுக்கு பெரும் பூஜை, 4:30 மணிக்கு மாரியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம், பொங்கல், பெரும் பூஜை நடைபெறும். 6:00 மணிக்கு கும்பம் விடப்படும். ஜூன், 1 காலை மறுஅபி?ஷகம் மற்றும் மஞ்சள் நீராட்டுவிழா, 2ல் பொங்கல் வைத்தலுடன் விழா முடிகிறது.