உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடையாம்பட்டியில் தீர்த்தக்குட ஊர்வலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காடையாம்பட்டியில் தீர்த்தக்குட ஊர்வலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மகுடஞ்சாவடி: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. இளம்பிள்ளை அருகே, காடையாம்பட்டி செங்குந்தர் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 17ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடந்தது. 8:00 மணிக்கு கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீராடி, புனித தீர்த்தத்தை குடங்களில் நிரப்பி சிறப்பு பூஜை செய்தனர். பின் தலையில் குடங்களை சுமந்தவாறு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை அடைந்தனர். ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11:00 மணிக்கு முதற்கால வேள்வி தொடங்கியது. இன்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை, 5:00 மணிக்கு பாராயணம், அஷ்டலஷ்மி பூஜை, கோபுர கண் திறப்பு, மூன்றாம்கால யாகவேள்வி நடக்கிறது. 29ல் காலை, 9:00 - 10:30 மணிக்கு மாரியம்மன், முத்து குமாரசாமி ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !