மலையாள சுவாமி கோவில் திருவிழா: பால் குட ஊர்வலம்
ADDED :2329 days ago
குளித்தலை: ராஜேந்திரம் ஏகிரியம்மன், மலையாள சுவாமி கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரத்தில், ஏகிரியம்மன், மலையாள சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து ராஜேந்திரம், மருதூர், பட்டவர்த்தி கிராம பக்தர்கள், பால்குடம். தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதன்பின், கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மதியம், 1:00 மணியளவில், காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் அக்னிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி வந்தனர். இன்று மாலை, ஏகிரியம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு, விடையாத்தி, அடசல் போடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.