கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை
ADDED :2329 days ago
மணவாள நகர் : மணவாள நகர் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலில், 64ம் ஆண்டு ஜாத்திரை நடந்தது.
மணவாள நகர் அடுத்த, ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ளது கெங்கை அம்மன் கோவில். இங்கு, 64ம் ஆண்டு ஜாத்திரை, 26ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.அன்று, மாலை, 3:00 மணிக்கு, பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்றுமுன்தினம், காலை, 7:00 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம் ஏந்தி, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு ஆராதனையும் நடந்தது. பின், நேற்று, காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு பழம் குத்துதலும், கூழ்வார்த்தலும், ரதம் இழுத்தலும் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 5:00 மணிக்கு கங்கை நாதசுவாமி கோவிலிலிருந்து, சீர்வரிசை நிகழ்ச்சியும் நடந்தது.