உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை உச்சிமாகாளி அம்மனுக்கு திருக்கல்யாணம்

உடுமலை உச்சிமாகாளி அம்மனுக்கு திருக்கல்யாணம்

உடுமலை:உடுமலை வல்லக்குண்டாபுரத்தில் நடந்த உச்சிமாகாளியம்மன் திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கொடிங்கியம் ஊராட்சி வல்லக்குண்டாபுரம் உச்சிமாகாளியம்மன் கோவிலில், கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது.

தொடர்ந்து, காளியம்மனுக்கு, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்றுமுன்தினம், 28ம் தேதி  சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 29ம் தேதி அதிகாலையில், சிறப்பு அலங்காரத்துடன், உச்சிமாகாளியம்மனுக்கு, திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் இதை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தும், வேண்டுதல்களை நிறைவேற்றினர். திரளான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !