வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் துர்க்கை அம்மன் கோயில் விழா
ADDED :2333 days ago
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான் துர்க்கை அம்மன் கோயில் விழா 3 நாட்கள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் (மே., 28ல்) இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். அக்னிசட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.