சூலூர் அருகே மகாலட்சுமி கோவிலில் கல்யாண உற்சவ திருவிழா
ADDED :2336 days ago
சூலூர்: சூலூரை அடுத்த குளத்தூர் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன், 65 வது ஆண்டு கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. நேற்று 29ம் தேதி அதிகாலை சக்தி கரகம் எடுக்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வந்தனர். சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா, மறு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் மக்கள் செய்திருந்தனர்.