உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தனூர் அம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா

அத்தனூர் அம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா

சூலூர்: சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் பழமையானது. இங்கு, 26ம் ஆண்டு திருக்கல்யாண விழா, கடந்த, மே 14ம் தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 21ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, தினமும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. உலக நலன் வேண்டி துர்க்கா சூக்த ஹோமம், மகா சுமங்கலி பூஜை, திருக்கல்யாண அம்மை அழைத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று (மே., 29ல்)காலை நொய்யல் ஆற்றில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனை மேள தாளத்துடன் அழைக்கும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, மாவிளக்கு மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இன்று (மே., 30ல்) இரவு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !