உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டூரில் உள்ள பாலவிநாயகருக்கு கும்பாபிஷேகம்

மேட்டூரில் உள்ள பாலவிநாயகருக்கு கும்பாபிஷேகம்

கோவை: போத்தனூர், மேட்டூரில் உள்ள பாலவிநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (மே., 29ல்)நடந்தது.

கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 27ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் (மே., 28ல்) காலை, விமான கலசங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை விமான கலசங்கள் நிறுவப்பட்டன. நேற்று (மே., 29ல்) அதிகாலை, 5:00 மணி முதல், திருப்பள்ளி எழுச்சி, காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி உள்ளிட்டவை நடந்தன.

தொடர்ந்து, திருக்குடங்கள் கோவிலை வலமாக கொண்டு வந்து, சுவாமிகளுக்கு,கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இப்பகுதியில் செயல்படும் துளிர் அமைப்பு சார்பில், கோவில் வளாகம் மற்றும் முன்பகுதியில், 15க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !