உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி ஏழு கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு

கிருஷ்ணகிரி ஏழு கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு

கிருஷ்ணகிரி: மழை வேண்டி ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கரகம் சுமந்து, தீ மிதித்து வேண்டி கொண்டனர்.

பர்கூர் ஒன்றியம், பெலவர்த்தி பஞ்.,ல், கடந்த, 2006ல் கனமழை பெய்தது. அதன்பிறகு சரியான மழை இல்லாததால், இப்பகுதியில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதனால் இங்குள்ளவர்கள் வருமானமின்றி கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டனர். தற்போது இந்த பஞ்.,ல் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, மழை வேண்டி பெலவர்த்தி பஞ்.,ல் உள்ள, தின்னூர், தின்னூர் காட்டூர், சீதலப்பள்ளி, மிஷின்கொட்டாய், குண்டூர், பெரிய பெலவர்த்தி, நாகமரத்துப்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி, கரகத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு வெளியில் சென்று, புனித நீராடி, காளியம்மன், மாரியம்மன், குண்டி மாரியம் மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், கோவில் வளாகத் தில் மழை வேண்டி தீ மிதித்தனர். நிகழ்ச்சியில், ஏழு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !