உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் ராஜகோபால சுவாமி கோவிலில் 12ம் தேதி பாலாலயம் துவக்கம்

கடலூர் ராஜகோபால சுவாமி கோவிலில் 12ம் தேதி பாலாலயம் துவக்கம்

கடலூர்: கடலூர் ராஜகோபால சுவாமி கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் வரும் 12ம் தேதி துவங்குகிறது. கடலூர், புதுப்பாளையத்தில் செங்கமலத் தாயார்
சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது, கடலூர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் உபயத்தில்
ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோவில் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் வரும் 14ம் தேதி துவங்குகிறது. இதனை
முன்னிட்டு 12ம் தேதி மாலை துவங்கும் யாக சாலை பூஜையில் 15 குண்டங்கள் அமைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். 13ம் தேதி இரண்டு கால யாக சாலை பூஜைகள் முடிந்து கோவிலுக்கு பாலாலயம் நடக்கிறது.

ஏற்பாடுகளை உபயதாரர் கடலூர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோவில்
நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, பட்டாச்சாரியார்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !