ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடை திறப்பு
ADDED :2358 days ago
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நாளை (ஜூன் 2ல்) இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமான ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, விசேஷ தினங்கள், அமாவாசை தினங்களில், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தினமும், காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையில், கோவில் நடை திறந்திருப்பது வழக்கம்.
அமாவாசைக்கு முன்தினம் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.வரும், 3ம் தேதி அமாவாசை என்பதால், நாளை, 2ம் தேதி இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். அமாவாசை வழிபாட்டிற்காக, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.