உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன், கோவில்களில் திருவிழா

பொள்ளாச்சி மாரியம்மன், கோவில்களில் திருவிழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த, முத்துக்கவுண்டனூர் மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சியாமளாதேவி கோவில்களில் திருக்கல்யாண திருவிழா நடந்தது.பொள்ளாச்சி அடுத்த முத்துக்கவுண்டனூரில், விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் சியாமளாதேவி கோவில்களில் கடந்த, மே 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது.கடந்த, 20ம் தேதி கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது.சக்தி கரகம் எடுத்து, அம்மன் அழைப்புடன், திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர்.

மாகாளியம்மன், மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.அதேபோன்று, கடந்த, 28ம் தேதி, சியாமளாதேவி கோவிலுக்கு சக்தி கரகம் எடுத்து வருதலும், அம்மன் அழைப்பும், சக்தி கம்பம் கங்கையில் விடுதலும் விமரிசையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !