உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் விநாயகர் உண்டியலில் ரூ.1.76 லட்சம் காணிக்கை

காஞ்சிபுரம் விநாயகர் உண்டியலில் ரூ.1.76 லட்சம் காணிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில் உண்டியலில், 1.76 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், திருக்கச்சியம் பதி விநாயகர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் உண்டியல் திறக்கப்பட்டது.செயல் அலுவலர், ந.தியாகராஜன், பக்தர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 1.76 லட்சம் ரூபாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !