உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனூர் விநாயகர் சிலை அகற்றம் கரிக்கலாம்பாக்கத்தில் பரபரப்பு

வில்லியனூர் விநாயகர் சிலை அகற்றம் கரிக்கலாம்பாக்கத்தில் பரபரப்பு

வில்லியனூர்: கரிக்கலாம்பாக்கம் இரு மனைபிரிவுகளுக்கு இடையே இருந்த விநாயகர் சிலைஅகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி நகர் மற்றும் சிவதஷ்ணி நகர்களுக்கு இடையே, ராஜிவ்காந்தி நகர மக்களின் பொது பயன்பாட்டிற்கான இடம் உள்ளது. அந்த இடத்தில் ராஜிவ்காந்தி நகர் மக்கள் சிறிய பீடம் அமைத்து, விநாயகர் சிலைவைத்து வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் சிவதஷ்ணி நகரில் மனை வாங்கி வீடு கட்டி வசித்து வருபவர், ராஜிவ்காந்தி நகர் பொது இடத்தில் வைத்துள்ள விநாயகர் சிலையை அகற்றி, தனது வீட்டின் பின்பகுதிக்கு சாலையாக மாற்றி கொடுக்க வேண்டி கலெக்டர், பஞ்சாயத்து ஆணையர்உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுகொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், நேற்று (ஜூன்., 3ல்) மதியம் போலீஸ் உதவியுடன், ராஜிவ்காந்தி நகர் பொது இடத்தில் இருந்த விநாயகர் சிலையை அகற்றினர்.இதனால் ஆவேசமடைந்த கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி நகர் மக்கள் சிலை இருந்த பகுதியில், இரவோடு இரவாக மதில் அமைத்தனர். இதனால் சிவதஷ்ணி நகர் பகுதி முட்டு சந்தாக மாற்றப்பட்டுள்ளது.இந்த சம்பவங்களால் இரு நகர மக்களிடையே பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !