மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவில் மஞ்சள் நீர் உற்சவம்
ADDED :2420 days ago
மங்கலம்பேட்டை: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்) மஞ்சள் நீர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில், கடந்த 31ம் தேதி நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்) காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.